டெல்லி: ஒரே வேட்பாளர் வேட்பாளர் பல தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில், சட்டத்தை மாற்ற தேர்தல் ஆணையம் மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, கருத்து தெரிவிக்க உத்தரவிட்டுள்ள தேர்தல் ஆணையம், ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்க மத்திய அரசு புதிய சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
தற்போதை விதிகளின்படி, வேட்பாளர் ஒருவர், பல தொகுதிகளில் போட்டியிட முடியும். தோல்வியை தவிர்க்க அவர்கள் இரண்டு தொகுதிகள் போட்டியிடுவார்கள். அதில் ஒரு தொகுதியாகவது வெற்றி பெறும் என்ற நம்பிக்கை. ஆனால், இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்து விடுவர். அதனால் அந்த பகுதிக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும். இதனால் செலவு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையிலும், மத்திய அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. அ
தாவது, ஒரு வேட்பாளர் ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் போட்டியிடுவதால் , மறுதேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இதனால் தேர்தல் செலவு இரு மடங்காக உயர்கிறது. இதனை தடுக்க மத்திய அரசு, தேர்தல் விதிமுறைகள் சட்டத்தில் புதிய விதிமுறைகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் பரிந்துரை செய்துள்ளது.
ஏற்கனவே இதுதொடர்பான உச்சநீதிமன்ற வழக்கின் விசாரணையின்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு தடை விதிக்கலாம் தற்போதைய சட்டங்கள் இதற்கு அனுமதி அளிப்பதாக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.