டில்லி

தேர்தல் முடிவுகள் குறித்து ஜோசியத் தகவல் வெளியிடுவதும் சட்ட விரோதம் ஆகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இன்று இமாசலப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது தெரிந்ததே.   அடுத்த மாதம் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  இதில் கருத்துக் கணிப்பு,  எக்சிட் போல்,  ஆகிய எந்த ஒரு அனுமான முடிவுகளையும் வெளியிடக் ஊடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பல செய்தித் தொலைகாட்சி சேனல்கள் தேர்தல் நடைபெறும் போது மாதிரி வாக்கெடுப்பு,  எக்சிட் போல் எனப்படும் வாக்களித்தவர்களிடம் கருத்துக் கேட்பது ஆகியவைகளை ஒவ்வொரு தேர்தலிலும் நடத்தி வந்துள்ளது.  அதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்ததை அடுத்து,  ஜோதிட நிகழ்ச்சி என்னும் பெயரிலும் குறி சொல்லுதல் என்னும் பெயரில் பல ஊடகங்கள் தேர்தல் கணிப்புக்களை வெளியிட்டன.

அதற்கும் தற்போது தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.   எந்த ஒரு துறையைச் சார்ந்தவரையும் அழைத்து தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் எனவோ, எந்தக் கட்சி தோற்கும் எனவோ கருத்துக்கள் வெளியிடுவது சட்ட எண் 126A வின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்துள்ளது.