டெல்லி

தேர்தல் ஆணையம் நேற்றைய 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டுள்ளது.

நேற்று 96 தொகுதிகளில் 4 ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.  இது குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி மாநில வாரியாக பாதிவான வாக்குப்பதிவு

மேற்கு வங்காளம் (8 தொகுதிகள்) : 76.56 சதவீதம்,

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதி : 37.93 சதவீதம்

ஆந்திரா (25 தொகுதிகள்) : 68.20 சதவீதம்

பீகார் (5 தொகுதிகள்) : 56.75 சதவீதம்

ஜார்கண்ட் (4 தொகுதிகள்) : 64.59 சதவீதம்

மகாராஷ்டிரா (11 தொகுதிகள்) : 57.58 சதவீதம்

ஒடிசா (4 தொகுதிகள்): 64.81 சதவீதம்

தெலுங்கானா (17 தொகுதிகள்) : 62.28 சதவீதம்

உத்தரபிரதேசம் (13 தொகுதிகள்) : 58.05 சதவிதம்

மத்தியபிரதேசம் (8 தொகுதிகள்) : 71.72 சதவீதம்.

ஏற்கனவே நடந்த 3 கட்ட தேர்தல்களில் பதிவான வாக்கு முதல்கட்ட தேர்தல் 66.14 சதவீதம், 2-ம் கட்ட தேர்தல் 66.71 சதவீதம், 3- கட்ட தேர்தல் : 65.68 சதவீதம். ஆகும்  நேற்றைய 4 ஆம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் 4-வது கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை விட குறைவாகும். அப்போது 4 அம் கட்டமாக 71 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 65.51 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த தேர்தலில் 2.5 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் குறைந்திருக்கிறது.

நேற்றைய தேர்தலில் பல வாக்குச்சாவடிகளில் 6 மணிக்கு மேலும் வாக்குப்பதிவு நடந்ததால் வாக்கு சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.