புதுடெல்லி: ஒடிசாவில், பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்து, அதனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசினை, ஒடிசாவிலிருந்து கர்நாடகா செல்லுமாறு உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக வந்தார். அப்போது, பிரதமர் பயணம் செய்த ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்டார் அங்கு பொறுப்பிலிருந்த ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசின்.
இதனையடுத்து, அவர் தேர்தல் கமிஷனால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர், ஒடிசாவை விட்டு உடனடியாக நீங்கி, பெங்களூரு சென்று, அங்குள்ள முதன்மை தேர்தல் அதிகாரியிடம் ரிப்போர்ட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்த தேர்தல் கமிஷனின் நடவடிக்கை கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரை அது காப்பாற்ற முயல்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
– மதுரை மாயாண்டி