கமதாபாத்

தேர்தல் ஆணையம் தனது முதல் கட்ட பரிசோதனையில் 3550 பழுதான வாக்கு ஒப்புகை இயந்திரங்களைக் கண்டுபிடித்துள்ளது.

குஜராத் தேர்தல் இரு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14ஆம் தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.    இந்த தேர்தலில் 70182 வாக்கு ஒப்புகை இயந்திரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.   இதில் 46000 இயந்திரங்கள் பெங்களூருவில் உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடட் மற்றும் ஐதராபாத்தில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் கார்பொரேஷன் ஒஃப் இந்தியா ஆகிய நிறுவனங்களில் இருந்து வாங்கப்பட்டுள்ளன.  மீதமுள்ளவை பஞ்சாப், உ.பி., ம.பி. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஜார்க்கண்ட், ஹரியானா, கோவா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வாங்கப்பட்டவை.

தேர்தல் ஆணையம் நடத்திய முதல் கட்ட பரிசோதனையில் இந்த இயந்திரங்களில் 3550 இயந்திரங்கள் பழுதானவை என தெரிய வந்துள்ளது.   இவைகளில் சென்சார்கள் வேலை செய்யாமை, இணைப்புக் குழறுபடிகள், உடைந்த பிளாஸ்டிக் பாகங்கள் ஆகிய பழுதுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.   இவைகளை மாற்றச் சொல்லி தயாரிப்புத் தொழிற்சாலைகளுக்கு அனுப்பட உள்ளன.

குறிப்பாக ஜாம்நகர் மாவட்டத்தில் அனுப்பப்பட்ட இயந்திரங்களில் சுமார் 26%க்கும் மேல் பழுதான இயந்திரங்கள் காணபட்டுள்ளன.   மற்றும் சில இடங்களில் 19லிருந்து 20% பழுதான இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.   எனவே மேலும் 4150 இயந்திரங்கள் வாங்கி வைத்துக்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.   கடைசி நேரப் பழுது கண்டுபிடிக்கப்பட்டால் இந்த இயந்திரஙகள் மாற்று இயந்திரங்களாக உபயோகப்படுத்தப்படும் என தெரிய வந்துள்ளது.