EC cancels Anantnag by-polls over worsening law and order situation
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற இருந்த மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது..
ஆனந்த்நாக் மக்களவை தொகுதிக்கு வரும் மே 25ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. தற்போது வரை சூழ்நிலை சரியாகாத காரணத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக தேர்தல் ஆணையம் 70 ஆயிரம் பாதுகாப்புபடை வீரர்களை கேட்டிருந்தது. ஆனால் உள்துறை அமைச்சகம் 30ஆயிரம் வீரர்கள் மட்டுமே தரமுடியும் என கூறியதால் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ஜம்முகாஷ்மீர் ஆளுநர் என்.என்.வோரா இன்று (02.05.17) உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து அங்கு நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமை பற்றி விவாதிக்க உள்ளார்.
கடந்த மாதம் 9ம் தேதி ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது பெரும் வன்முறை வெடித்தது. இதில் பொதுமக்கள் தரப்பில் 7 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் ஏப்ரல் 12ம் தேதி அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. பின்னர் மே 25ம் தேதிக்கு அது தள்ளிவைக்கப்பட்டு, தற்போது அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.