Bodies of Two Soldiers Mutilated by Pakistan Army, India Vows Revenge

 

இந்திய ராணுவ வீரர்களைக் கொன்று, உடல்களைச் சிதைத்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி கொடுப்பதற்கு இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

 

ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதியில் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணகாதி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. திங்கள் கிழமை காலையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையை சேர்ந்த இருவர் பலியாகினர். இந்த வீரர்களின் உடல்களை, பாக்., ராணுவத்தினர் சிதைத்து, தலையை துண்டித்ததால், எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வா வந்து சென்ற 24 மணி நேரத்திற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய ராணுவமும், இந்திய ராணுவ வீரர்கள் உடல் சிதைக்கப்பட்ட சம்பவத்திற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். எல்லையில் பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கதல் நடத்தும் நிலையில், பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டு இந்த சதிச்செயலை அரங்கேற்றியுள்ளது எனக்கூறியுள்ளது. ராணுவ தளபதி பிபின் ராவத்தும் தற்போதும் காஷ்மீரில் உள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இதே போல் எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய ராணுவ வீரர்களைக் கொன்று, அவர்களது உடல்களைச் சிதைக்கும் சம்பவத்தை அரங்கேற்றினர்.