டெல்லி: தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில்  கைதானவர்  சுகேஷ் சந்திரசேகர். 2007ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன் உள்ளிட்ட 9 பேர் மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகருக்கு உச்ச நீதிமன்றம் 2 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கியது.  இந்த வழக்கில் டிடிவி தினகரன் உள்பட 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.