அகமதாபாத்
ராகுல் காந்தியை கேலி செய்யும் பா ஜ க விளம்பர வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது
குஜாராத்தில் தேர்தல் பிரச்சாராம் மும்முரமாக நடை பெற்று வருகிறது. இதற்காக வீடியோ , ஆடியோ என பல விதங்களில் ஒவ்வொரு கட்சியும் விளம்பரம் செய்து வருகின்றன. அதில் ஒன்றாக பா ஜ க சார்பில் அனுமதி கோரி ஒரு வீடியோவையும் ஆடியோவையும் தேர்தல் ஆணையத்துக்கு பா ஜ க சமர்ப்பித்திருந்தது.
பா ஜ க வினர் எப்போதுமே ராகுல் காந்தியை பப்பு என குறிப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. பப்பு என்பதற்கு சிறு பையன் எனப் பொருள். இந்த வார்த்தை அந்த ஆடியோ மற்றும் வீடியோ வில் இடம் பெற்று இருந்தது. தேர்தல் ஆணையம் அந்த வீடியோ மற்றும் ஆடியோவை ஒளி/ஒலிபரப்ப தடை விதித்துள்ளது. பப்பு என்பது மரியாதைக்குறைவான வார்த்தை என ஆணையம் காரணம் கூறியது.
பா ஜ க தர்ப்பில் தாங்கள் யாரையும் குறிப்பிட்டு பப்பு என்னும் வார்த்தையை உபயோகிக்கவில்லை என்றும், அந்த வார்த்தைக்கு தடை விதிக்கப் பட்டதால் அதே இடத்தில் வேறு வார்த்தையை மாற்றி மீண்டும் அனுமதி கோருவோம் என கூறப்பட்டுள்ளது.