அகமதாபாத்
குஜராத் மாநில சட்டப்பேரவை தொகுதிகளான மானவதார் மற்றும் தாரங்கதாரா தொகுதிகளில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளன.
குஜராத் மாநிலத்தில் ஜுனாகர் மாவட்டத்தில் உள்ள மானவதார் சட்டப்பேரவை தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் ஜவகர் சாவ்தா காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதை ஒட்டி இந்த தொகுதி காலியாக உள்ளது. அத்துடன் தாரங்கதாரா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் வழக்கு காரணமாக ராஜினாமா செய்துள்ளதால் அந்த தொகுதியும் காலியாக உள்ளது.
தேர்தல் ஆணையம் வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி மூன்றாம் கட்ட மக்களவை தேர்தலில் குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகளுக்கு தேர்தலை அறிவித்துள்ளது. அத்துடன் இந்த இரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அதே தினத்தன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
இந்த இரு இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வரும் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. வேட்பு மனு அளிக்க கடைசி தினம் ஏப்ரல் 4 ஆகும். வேட்பு மனு திரும்பப் பெற கடைசி தினம் ஏப்ரல் 8 ஆகும். இந்த தேர்தல்களின் வாக்குகளும் மக்களவை தேர்தல் வாக்குகளுடன் இணைந்து மே மாதம் 23 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.