சென்னை

மிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அதிகாரிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வரும் ஆண்டு தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குச் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன.  இதையொட்டி அரசியல் கட்சிகள் முதற்கட்ட பணிகளான கூட்டணி பேச்சு வார்த்தை, பிரச்சார தொடக்கம் உள்ளிட்ட பணிகளைத் தொடங்கி உள்ளன.   தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும், அதிமுக அணிகளுக்கிடையே போட்டி உள்ளது.

இந்நிலையில் இந்த தேர்தல்களுக்காக நியமிக்கப்பட உள்ள அதிகாரிகள் நியமனம், பணி உள்ளிட்டவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன் விவரங்கள் பின் வருமாறு :

  •  தேர்தல் பணிகளில் நேரடியாக ஈடுபடும் அதிகாரிகளை அவரவர் சொந்த மாநிலத்தில் பணி அமர்த்தக் கூடாது
  •  வரும் ஆண்டு சட்டப்பேரவை தேர்ஹ்டலில் அதிகாரிகளை நியமிக்கும் போது இது அவசியம் பின்பற்றப்பட வேண்டும்
  • இதற்கு முன்பு தேர்தல் பணிகளில் சரியாக ஈடுபடவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு எவ்வித பணிகளும் வழங்கக் கூடாது.
  • இன்னும் 6 மாதங்களுக்குள் ஓய்வு பெற உள்ள அதிகாரிகளுக்கு எவ்வித தேர்தல் பணிகளும் வழங்கக்கூடாது.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.