டெல்லி

டந்த 7 ஆம் தேதி நடந்த 3 ஆம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 7 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற 3 ஆம் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. அன்று 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

தற்போது 3 ஆம் கட்ட தேர்தலில் 65.68 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  இதில் ஆண் வாக்காளர்கள் 66.89 சதவீதமும், பெண் வாக்காளர்கள் 64.41 சதவீதமும், 3-ம் பாலினத்தவர்கள் 25.2 சதவீதமும் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முதல் 2 கட்ட தேர்தல்களில் பதிவான வாக்கு சதவிகிதம் முதல் கட்டத்தில், 66.14 சதவீதம் மற்றும் இரண்டாம் கட்டத்திற்கு 66.71 சதவீதம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் முதல் கட்ட வாக்குப்பதிவின் வாக்கு சதவிகிதம் 10 நாட்களுக்குப் பிறகுதான் வெளியிடப்பட்டதும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின் வாக்கு சதவிகிதம் 4 நாட்களுக்குப் பிறகுதான் அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.