டெல்லி: பல பெரு நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கிய நிலையில், அடுத்ததாக இபே நிறுவனமும், பணியாளர்களை நீக்கப்போவதாக அறிவித்து உள்ளது. அதன்படி 4சதவிகித ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக  தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு பிறகு, பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை கடந்த ஆண்டு (2022) முதல் தொடங்கியது. ஆனால், இந்த ஆண்டு (2023)  தொடங்கியது முதல் பெரு நிறுவனங்கள் அடுத்தடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து வருகின்றன.  ஜனவரி மாதத்தில் மட்டும் அமேசான் தனது 18 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்த நிலையில், தொடர்ந்து பிரபல கூகுள் நிறுவனத்தின் 12ஆயிரம் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என கூகுளின் தலைமை நிறுவனம் ஆல்ஃபாபெட் அறிவித்துள்ளது. ஜூம் 15சதவீத பணியாளக்ரலை பணிநீக்கம்  செய்தது. தொடர்ந்து மைக்ரோசாஃப்ட், யாகூ, சேல்ஸ்ஃபோர்ஸ், இண்டெல்,என பல நிறுவனங்கள் அடுத்தடுத்து ஆட்களை குறைப்பதாக அறிவித்து, நடவடிக்கை எடுத்து வருகின்றன. பொருளாதார மந்தநிலையை காரணம் காட்டி கடந்தாண்டில் இருந்து இந்த பணிநீக்க நடவடிக்கைகளை பல்வேறு நிறுவனங்களும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில், தற்போது பிரபல பண வர்த்தக நிறுவனமான இபே, 4 சதவிகித பணியாளர்களை நீக்குவதாக அறிவித்து உள்ளது.   ஈகாமர்ஸ் நிறுவனமான இபே பொருளாதார நிலையின் காரணமாக 500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.  இதை eBay இன் தலைமை நிர்வாக இயக்குநர் ஜெமி லேனோன் அறிவித்துள்ளார். இது  ஊழியர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள், வாடிக்கையாளர் கண்டுபிடிப்புகள் மற்றும் முக்கிய சந்தைகள் மற்றும் மாறிவரும் மேக்ரோ, இ-காமர்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிலப்பரப்புடன் தொடர்ந்து மாற்றியமைக்க மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிக திறன் கொண்ட பகுதிகளில் முதலீடு செய்வதற்கும் புதிய பாத்திரங்களை உருவாக்குவதற்கும் இந்த மாற்றம் எங்களுக்கு கூடுதல் இடத்தை வழங்குகிறது. ‘முடிவுகளை மிகவும் திறம்பட மற்றும் அதிக வேகத்துடன் எடுக்க எங்கள் கட்டமைப்பை எளிதாக்குகிறோம்,” என்று அவர் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார்.