திருவண்ணாமலை:
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய – மாநில மாநாடு இன்று தொட்ங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை கேரள முதல்வர் கலந்து கொள்கிறார்.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 15-ஆவது மாநில மாநாடு, திருவண்ணாமலையில் இன்று தொடங்கி, 3 நாட்கள் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை அருகே உள்ள வேங்கிக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் தொடங்கி வைத்தார். மாலையில் மாநாட்டு வளாகத்தின் திறந்தவெளி அரங்கில் கருத்தரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
கடைசி நாளான செவ்வாய்க்கிழமை மாலை திருவண்ணாமலை, காமராஜர் சிலையில் மின் ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறுகிறது. இதில் 20ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊர்வலத்தை அடுத்து அண்ணா சிலை அருகே பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன், சிஐடியு மாநிலத் தலைவர் ஏ.சவுந்தர்ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், சிஐடியு நிர்வாகி கே.கனகராஜ், பொதுச்செயலர் ஜி.சுகுமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.