சென்னை:
மிழ் பாடத்தை எளிதில் கற்றுகொள்ளும் வகையில் ஒளியும் ஒலியும் நடையில் பாடல்கள் குறித்த வீடியோவை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.
tn-2
தமிழக பள்ளிக் கல்வித்துறையின்  மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.. இதன் மூலம்  மாணவர்களுக்கு  செயல்வழி கற்றல், கணினி வழி கற்றல் போன்ற பல திட்டங்களில்,  மொழியை எளிதாக கற்று கொடுக்கும் திட்டம் போன்ற  கற்றல் சார்ந்த தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
இதன்மு தற்கட்டமாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அறிவியல்  பாடங்களை 4D பரிமாணத்தில்  மாணவர்கள் எளிதில் படிப்பதற்கு வசதியா  புதிய, ‘சிடி’  ஒன்றை ஏற்கனவே வெளியிட்டது.
அதையடுத்து, தற்போது அறிவியல் பாடம் சம்பந்தமான  இந்த வீடியோ படம், தமிழ்நாடு கல்வித்துறை என்ற பெயரில் வெளியிடப்பட்டு,  அந்த வீடியோ பாடம்  ‘யூடியூபிலும் இணைக்கப்பட்டு உள்ளது.  மேலும் இதற்கான ஆப், கூகுல் பிளே ஸ்டோரிலும் கிடைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதையடுத்து தொடக்க கல்வி மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியை எளிதாக கற்கும் நோக்கத்தில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகத்தில் உள்ள, 40 பாடல்களை மாணவர்களின் நடனத்துடன் வீடியோவாக தயாரித்துள்ளனர்.
tn-1
இந்த வீடியோக்கள் அனைத்தும்   யூ-டியூப்பில், ‘தாயெனப்படுவது தமிழே’ என்ற பெயரிலும், தமிழ்நாடு எஸ்.சி.இ. ஆர்.டி., சேனல் என்ற பிரிவிலும்  பதிவேற்செறம்ய்ய ப்பட்டு உள்ளன.
இந்த சிடிக்களை தமிழகம் முழுவதும் உள்ள  35 ஆயிரம் தொடக்க பள்ளிகளுக்கு, இலவசமாக அனுப்பப்பட உள்ளதாக, எஸ்.சி.இ.ஆர்.டி  இயக்குனர்  கூறினார்.