பப்புவா நியூ கினியா நாட்டின் போகைன்வில்லி பகுதியை இன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது.
பசிபிக் கடற்பகுதியில் அமைந்துள்ள இந்த தீவில் இன்று காலை பயங்கர சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
பிரிட்டன் நாட்டுக்கு சொந்தமான பி.எம்.ஜி. தீவின் தென்பகுதியில் உள்ள ‘லயே’ என்ற இடத்தில் இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி ஏதும் ஏற்படாது என்றும், அதற்கான வாய்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சேத விவரம் ஏதும் தெரியவில்லை.
தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடந்த 1998-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து உண்டான 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் விளைவாக மூன்றுமுறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2100 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.