ப்பானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது   ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

 

ஜப்பான் மேற்கு பகுதியில் இன்று காலை  7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,   ஜப்பானின் ஹோன்ஷூ அருகே அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொது மக்கள் அச்சத்துடன் வெளியேறியுள்ளனர். மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் வானிலை ஆய்வு மையம், இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களின் மேற்குப் பகுதிகளில் தொடர்ச்சியான வலுவான நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது,  இந்த நிலநடுக்கம் காரணமாக கடலில் 5 மீட்டர் அளவு கடல் அலைகள் உயரலாம் என மிக அதிகமான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.