டோக்கியோ: தைவானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக,   ஜப்பானிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில்,  இன்று ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தைவானில் நேற்று  7.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது.  25 ஆண்டுகள் காணாத சக்திவாய்ந்த அதிர்வு இந்த நிலநடுக்கத்தைச் தொடர்ந்து ஜப்பானிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜப்பானின் வடக்கு கடற்கரையான ஹோன்ஷூவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் இன்று காலை (வியாழக்கிழமை)  8.46 மணிக்கு 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 55 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதேபோன்று 40 கி.மீ ஆழத்தில் டோக்கியோவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், இந்த சம்பவத்தில் பொருள் சேதங்கள், உயிர்ச்சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தைவானில் நேற்று ஏற்பட்ட  சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். தைவானின் தெற்குக் கடலோர நகரான ஹுவாலியனுக்கு சுமார் 18 கி.மீ. தெற்கு-தென்மேற்கே, 34.8 கி.மீ. ஆழத்தில்  நேற்று (புதன்கிழமைஸ்ரீ  காலை 7.58 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 5.28 மணி) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.4 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும், 7.2 அலகுகளாகப் பதிவானதாக தைவானின் மத்திய காலநிலை ஆய்வு நிறுவனமும் தெரிவித்தன.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 44 பின்னதிர்வுகள் ஏற்பட்டன. அவை ரிக்டர் அளவுகோலில் அதிகபட்சமாக 6.4 அலகுகள் வரை பதிவாகின. இதைத்தொடர்ந்து, ஜப்பானிலும் அதிர்வுகள் காணப்பட்டன. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.