கொல்கத்தா: மேற்கு வங்கத்தில், இன்று காலை (ஆகஸ்ட் 26, 2020) 4.1 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

மேற்கு வங்காளத்தின் துர்காபூரில் (Durgapur) இன்று காலை 7:54 மணிக்கு ரிக்டர் அளவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்காளத்தின் துர்காபூரின் 110 கிமீ தூரத்தில் இந்த  நிலநடுக்கவியல் மையம்  இருந்தாக மாநில அரசு தெரிவித்து உள்ளது. இதனால் மக்கள் பிதியடைந்து  சாலைக்கு ஓடிவந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் வரவில்லை.