தேஜ்பூர்: அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் கூறி உள்ளது.
அம்மாநிலத்தின் தேஜ்பூர் நகரில் இருந்து தென்கிழக்கே 49 கிலோ மீட்டர் தொலைவில் இன்று பிற்பகல் 2.26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது.

நிலநடுக்கம் ரிக்டரில் 2.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால்  ஏதேனும் உயிரிழப்புகளோ,பொருள் இழப்புகளோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
முன்னதாக ஜூன் 21ம் தேதி கவுகாத்தி மற்றும் பிற நகரங்களில் நிலநடுக்கம் பதிவானது. அண்டை மாநிலங்களான மணிப்பூர், மேகாலயா மற்றும் மிசோரம் ஆகிய   நிலநடுக்கம் உணரப்பட்டது.
 

[youtube-feed feed=1]