கொல்கத்தா:
இந்திய வங்கதேசத்தை ஒட்டிய மியான்மர் பகுதியில் இன்று மதியம் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பாதிப்பு மேற்கு வங்கம் பீஹார் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களிலும் உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று (23.08.2016) செய்வாய்க்கிழமை காலையில் இந்திய வங்க தேசத்தை ஒட்டிய மியான்மர் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று மதியம் மியன்மரில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ரிக்டர் அளவில் 6.9 க்கும் அதிகமாக அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியுடன் வீட்டை விட்டு வெளியேறினர். பலர் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இன்று அசாம் மற்றும மணிப்பூர், நாகாலந்து பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.