மெக்சிகோ

ன்று மெக்சிகோவில் ரிக்டர் அளவில் 7.0 ஆன சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மெக்சிகோ வடக்கு அமெரிக்காவில் அமைந்துள்ளது.  இங்குள்ள குரெரோவின் அகாபுல்கோவில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது மெக்சிகோ நகரம் வரை கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியதாக நில அதிர்வு நிபுணர்கள் மற்றும் அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனால் அங்கு மின் தடை மற்றும் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நிலநடுக்கம் காரணமாகப் பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 8:47 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

மெக்சிகோவின் முக்கிய துறைமுகமான அகபுல்கோவின் வடக்கே இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.  இந்த பகுதி மெக்சிகோ நகரத்திற்கு தெற்கே 240 கிலோமீட்டர் (150 மைல்) தொலைவில் இருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு (USGS) மையம் தெரிவித்துள்ளது.