வேலூர்: வேலூரில் அடுத்தடுத்த நாட்களில் தொடர் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இன்று 3வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இன்று 3வது முறையாக நிலஅதிர்வு உணர்ப்பட்டுள்ளது. பேரணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து 3 வது நாளாக லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த நவம்பர் 28 வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு சுற்று வட்டாரத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. அதையடுத்து, டிசம்பர் 23ந்தேதி (நேற்று முன்தினம்) மீண்டும் நில அதிர்வு உண்டாது. இது 3.6 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருந்தது.
இதையடுத்து இன்று மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டது. இன்று காலை 9.30 மணி அளவில் மீண்டும் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். இந்த அதிர்வானது சுமார் 3 வினாடிகள் நில அதிர்வு நீடித்ததாகவும், வீடுகளில் உள்ள பாத்திரங்கள் உருண்டதாகவும், இதனால் பலர் வீதிக்கு ஓடியவதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து நில அதிர்வு வருவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.