ணிலா

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.

Seismograph for earthquake detection or lie detector is drawing chart. 3D rendered illustration.

இன்று பிலிப்பன்ஸ் தலைநகர மணிலாவில் இருந்து தென் மேற்கே சுமார் 140 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஹுக்கே நகர் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோவிலில் 6.2 ஆகப் பதிவாகி உள்ளது.  பூமிக்கு அடியில் 120 கிமீ ஆழத்தில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டு இருந்துள்ளது.

இந்த தகவலைத் தெரிவித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் நில நடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.  இது போன்ற நில நடுக்கங்கள் பிலிப்பின்சில் பரவலாக உணரப்படுவது வழக்கமான ஒன்று எனவும் இதனால் பாதிப்புக்கள் ஏதும் பெரிய அளவில் ஏற்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது.