குன்னூர்
இன்று குன்னூர் அருகே விவசாய நிலத்தில் 10 அடி வரை பூமி உள்வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் தற்போது ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது அதிகரித்து வருகிறது. இதில் நீலகிரி மாவட்டத்திலும் அதிக அளவில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படுகின்றன. இதில் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே உள்ள கேத்தி பாலாடா பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து விவசாயம் நடைபெறுகிறது.
அவ்வகையில் பேருந்து நிலையம் அருகே உள்ள கண்ணபிரான் என்னும் விவசாயி தனது விவசாய நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளார். திடீரென அந்த இடத்தில் 10 அடி ஆழத்துக்குப் பூமி உளவாங்கியது. இதனால் அங்குள்ள மக்களிடையே கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதைக் கண்டு அச்சமடைந்த அப்பகுதி விவசாயிகள் கேத்தி பேரூராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர். இதையொட்டி அங்கு அதிகாரிகள் விரைந்து வந்துள்ளனர். திடீரென நிலம் உள்வாங்கியது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.