திருவாரூர்: திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாவில் இரவு முதல் பெய்து வந்த கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அதிகாலை அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் விடித்நதும், விடுமுறை ரத்து என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் திருவாரூர் மாவட்டத் தில் நடைபெற்றுள்ளது. பெற்றோர்கள் மாவட்ட தலைமையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், திருவாரூர், நன்னிலம் மாவட்டத்திலும் நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து, கனமழை காரணமாக திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக இன்று அதிகாலை செய்தி வெளியானது. இது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது, பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெட்டு வரும் நிலையில், விடுமுறை அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் உடடினயாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச்சென்றனர். இதையடுத்து, மாவட்ட கலெக்டர் அறிவிக்கப்பட்ட விடுமுறையை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளார்.
கனமழை காரணமாக திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று (27.09.2022) அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் சற்றுமுன் அறிவிக்கப்பட்ட விடுமுறையை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்வதாக தெரிவித்து உள்ளார்.