சென்னை: விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சிக்கு ஒரு தொகுதியையும், மக்களரசு கட்சிக்கு ஒரு தொகுதியையும் அமமுக ஒதுக்கி ஒப்பந்தம் செய்துள்ளது.

ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. அதற்காக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு என பரபரப்பாக இயங்கி வருகின்றன.

அமமுக கட்சியும் தமது தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்கி உள்ளது. கூட்டணியில் உள்ள ஓவைக்கு கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்கிய அமமுக, நேற்று மருது சேனை சங்கம் மற்றும் கோகுல மக்கள் கட்சிக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கியது.

இந் நிலையில், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சிக்கு ஒரு தொகுதியையும், மக்களரசு கட்சிக்கு ஒரு தொகுதியையும் அமமுக ஒதுக்கி ஒப்பந்தம் செய்துள்ளது.

விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சிக்கு திருவிடைமருதூர் தொகுதியை அமமுக ஒதுக்கி உள்ளது. மக்களரசு கட்சிக்கு தனித்தொகுதியான திருத்துறைப்பூண்டி தொகுதியை அமமுக ஒதுக்கி இருக்கிறது.