மலேசியா: 4.5 பில்லியன் யூரோக்கள் ஊழல் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியான  மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குக்கு  12ஆண்டு சிறை தண்டனை விதித்த அந்நாட்டு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.  சுமார் 4.5 பில்லியன் யூரோக்கள்  இறையாண்மை சொத்து நிதியை கொள்ளையடித்ததில் ரசாக் ஒரு முக்கிய நபராக இருந்தார் என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

கடந்த 2009 முதல் 2018-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி வரை மலேசியாவின் பிரதமராக பொறுப்பு வகித்தவர் நஜீப் ரஸாக் (வயது 69),  நாட்டில் தொழில் வளத்தை பெருக்கும் வகையில், அந்நிய முதலீடுகளை  கவர, ‘1மலேசியா மேம்பாட்டு நிறுவனம்’ (1எம்டிபி) என்ற அமைப்பைத் தொடங்கினாா். இந்த நிறுவனத்தக்கு  450 கோடி டாலரை (சுமாா் ரூ.36,000 கோடி) நஜீபுடன் தொடா்புடையவா்கள் சட்டவிரோதமாக தங்களது கணக்கில் பரிமாற்றம் செய்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடா்பாக நடைபெற்று வந்த வழக்கில், நஜீப் ரஸாக் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது. அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஆனால்,   இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து வரும் நஜீப் ரஸாக், இந்தத் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேலும்,  நிபந்தனை ஜாமீனில் வெளியே இருந்தாா்.

நஜீப்மீதனா ஊழல் வழக்கு 5நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.  விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வெளியிடப்பட்டது. தீர்ப்பில்,  நஜீவ்  தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது நிரூபணமாகி உள்ளதாகவும், மக்கள் தனது மீது வைத்த நம்பிக்கைக்கு துரேகமிழைத்து, சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில் அவா் ஈடுபட்டது அந்த வழக்கில் சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறியதுடன் அவருக்கு விதிக்கப்பட்ட  12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை  உறுதி செய்தது.

அதையடுத்து, நஜீப் தனது சிறைவாசத்தை உடனடியாக தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது