வீணான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆபரணங்களை மறுசுழற்சி செய்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 5 ஆயிரம் பதக்கங்கள் தயாரிப்பு

Must read

டோக்கியோ:

வரும் 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக செல்போன்கள்,தங்கம், வெள்ளி, வெண்கத்தை மறு சுழற்சி செய்து 5 ஆயிரம் பதக்கங்கள் தயாராகிறது.


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன.

போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வழங்க வேண்டிய பதக்கங்கள், ஸ்மார்ட் போன், லேப்டாப், தங்கம், வெள்ளி, வெண்கலத்தை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்படவுள்ளது.

இத்தகைய மறுசுழற்சி முறை கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் பொதுமக்கள், தொழிலதிபர்கள் ஈடுபட்டனர்.

2016-ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் 30 சதவீத வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள், மறு சுழற்சியில் தயாரிக்கப்பட்டன.

2018-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் 47 ஆயிரத்து 488 டன் ஸ்மார்ட் போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும், 8 டன் தங்கம், வெள்ளி, வெண்கலத்தையும் பதக்கங்கள் செய்வதற்காக சேகரித்துள்ளனர்.

இதன்மூலம் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு வழங்க வேண்டிய 5 ஆயிரம் பதக்கங்கள் தயாரிக்கப்படும். இந்த பணியில் 1,600 உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

More articles

Latest article