லிஃபோர்னியா

லிஃபோர்னியா வாசிகளில் 68% பேர் அந்நகரை விட்டு வெளியேற விரும்புவதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு  கலிஃபோர்னியா உலகின் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது..  அதனால் இங்கு விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளன    இங்கு வசிக்கும் மக்கள் பலர் அதனால் துயருற்றுள்ளனர்.    இதை ஒட்டி கடந்த மாதம் 4ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ஒர் கருத்து கணிப்பு நடத்தப் பட்டுள்ளது.

பிரபல நிறுவனமான எடல்மேன் இண்டலிஜென்ஸ் நடத்திய இந்த கருத்துக் கணிப்பின் முடிவில், “கணக்கெடுப்பில் கலந்துக் கொண்டவர்களில் 62% பேர் அதாவது மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கலிஃபோர்னியாவின் சிறந்த தினங்கள் முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.     அத்துடன் 68% பேர் கலிஃபோர்னியாவை விட்டு வெளியேற விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

இதில் பெரும்பாலானோர் தொழில் நுட்ப பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆவார்கள்,   தற்போதுள்ள நிலையில் தொழிற்சாலைகள் மிகவும் பலவீனமடைந்து வருவதாகவும் தொழில் துறை வளர்ச்சி மிகவும் பின் தங்கி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.    கடந்த ஆண்டுல் மட்டும் 12% தொழில்கள் நலிவடைந்துள்ளன.

கலிஃபோர்னியாவை விட்டு வெளியேற விரும்புவர்களில் 72% பேர் இங்கு விலைவாசிகள் அதிகரித்துள்ளதாகவும்  சரியான மதிப்பில் வீடுகள் கிடைப்பதில்லை எனவும் கூறி உள்ளனர்.  இதனால் பலர் வீடற்றவர்களாக வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்” என அறிவிக்கப்பட்டுள்ளது.