சென்னை:
காங்கிரஸ் கட்சி கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் கொடுத்த புகாரின் பேரில் ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது அக் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளஞ்செழியன் தொடர்ந்து புகார் கூறியபடியே இருந்தார். இளங்கோவனும் பதிலுக்கு இளஞ்செழியனை கடுமையாக விமர்சிக்க, அது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இளங்கோவனஅ, கட்சித் தலைவராக இருக்கும்வரையில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்குள் வராமல் இருந்தார்.

இளங்கோவன்
இளங்கோவன்

 
இளங்கோவன், ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகு, தமிழக காங்கிரஸ் கட்சி, தலைவர் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சத்தியமூர்த்தி பவனுக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்தார் இளஞ்செழியன்.
“இளைஞர் காங்கிரஸுக்கு என்று சத்தியமூர்த்தி பவனில் அறையே இல்லை” என்று கூறி கோபண்ணாவின் அறையை கைப்பற்ற இளஞ்செழியன் அணியினர் முயற்சித்தனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது விஷயம் அறிந்து அங்கு வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்  இளஞ்செழியன் உள்ளிட்ட இளைஞர் காங்கிரசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  பிறகு  அங்கிருந்து கோபமாக புறப்பட்டு சென்றார்.
இளஞ்செழியன்
இளஞ்செழியன்

இளங்கோவன் ஆவேசமாக பேசியதை, த இளைஞர் காங்கிரசார் சிலர் ரகசியமாக செல்போனிலும் படம் பிடித்தனர்.
இந்நிலையில்  இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளஞ்செழியன், “ பலர் முன்னிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன்  என்னை கேவலமாக திட்டினார். , நாளை உன் வீட்டில் வந்து வெட்டுகிறேண்டா” என்று கொலை மிரட்டல் விடுத்தார். , கோபண்ணா உள்ளிட்டோர் வெளியில் வா தீர்த்து கட்டி விடுவோம் என்று மிரட்டினர்” என்று தெரிவித்தார்.
இதோ புகாரை  அண்ணாசாலை காவல் நிலையத்தில் தெரிவித்தார். இதையடுத்து  ஈவிகேஎஸ் இளங்கோவன், கோபண்ணா, ரங்கபாஷ்யம், கடல் தமிழ்வாணன், பொன் மனோகர், சீனிவாச மூர்த்தி, மதுசூதனன் உள்ளிட்டோர் மீது இ.பி.கோ. பிரிவு 143(கும்பலாக கூடுதல்), 352, 506(2)(ஆயுதத்தால் கொலை செய்வேன் என மிரட்டல்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   இதில் இ.பி.கோ. பிரிவு 506(2) கொலை மிரட்டல் பிரிவு ஆகும். இது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவாகும்.
ஆகவே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் கைது செய்யப்படலாம் என்ற பதட்டம் காங்கிரஸ் வட்டாரத்தில் நிலவுகிறது..