டில்லி

ந்தியாவில் விரைவில் இ பாஸ்போர்ட் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களை பிடித்து அமைச்சரவை அமைத்தது. இந்த அமைச்சரவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். நேற்று பாஸ்போர்ட் சேவை தினம் கொண்டடப்பட்டது. இதில் ஜெய்சங்கர் கலந்துக் கொண்டு விருதுகள் வழங்கினார்.

அதன் பிறகு தனது உரையில், “ மத்திய அரசு சார்பில் இ பாஸ்போர்ட் விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த பாஸ்போர்ட்டில் மின்னணு சிம் ஒன்று பொருத்தப்பட உளது. இவ்வாறு சிம் பொருத்தப்பட்ட இ பாஸ்போர்ட்டுக்களை விரைவில் வெளியிட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு வழங்கப்படும் இ பாஸ்போர்ட்டுகள் மூலம் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்படும்.

ஏற்கனவே அறிவித்த படி தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையமும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு சேவை மையம் இல்லாத ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு சேவை மையம் என்னும் அடிப்படையில் இவை தொடங்கப்படும். ஆண்டுக்கு தற்போது 1 கோடி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.