மே 7 முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாளை காலை 6 மணி முதல் இ-பாசுக்காக விண்ணப்பிக்கலாம்.
கோடை விடுமுறையை அடுத்து வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடை வாசஸ்தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதனால் வெளியூரில் இருந்து இந்த இடங்களுக்கு சுற்றுலா வரும் பயணிகளை பாதுகாக்க தமிழக காவல்துறையினர் அவர்களின் தரவுகளை இணையதளத்தில் பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளது.
If you’re planning to visit Ooty or Kodaikanal, you’ll need an e-pass.
நீங்கள் ஊட்டி அல்லது கொடைக்கானலுக்கு செல்ல திட்டமிட்டால், உங்களுக்கு இ-பாஸ் தேவை.
Visit the TNePass website: https://t.co/ycUNaWUJFM
This e-pass requirement is in effect from May 7 to June 30. Enjoy your… pic.twitter.com/lOssK72eNa
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) May 5, 2024
மே 7 முதல் ஜூன் 30 வரை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் விவரங்களை தவிர வாகன எண் உள்ளிட்ட விவரங்களையும் பதிவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.