சென்னை: பிற மாநிலங்களில் இருந்து தொழில்ரீதியாக தமிழகம் வருவோருக்கு இ பாஸ் வழங்குவதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா காரணமாக ஊரடங்கை அமல்படுத்திய பிறகு, பொதுமக்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர் சில வழிமுறைகளுடன் ஆட்சியர்கள் மூலம் அனுமதி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டி உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இ பாஸ் பெற்று செல்லும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. ஆனால், இப்படி இ பாஸ் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவின.
ஆகையால் அந்த நடைமுறையை எளிமைப்படுத்திய தமிழக அரசு, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என்று கூறியது. பிற மாநிலங்களில் இருந்து தொழில்ரீதியாக தமிழகம் வருவோருக்கு இ பாஸ் வழங்குவதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழக அரசு கூறி இருப்பதாவது: அதன்படி, பிற மாநிலங்களில் இருந்து வணிக ரீதியாக தமிழகம் வருவோருக்கு உடனடியாக இ பாஸ் வழங்கப்படும். தமிழகம் வந்து 3 நாட்களுக்குள் புறப்பட்டு செல்வதாக இருந்தால் தனிமைப்படுத்துதல் கிடையாது.
தொழில்துறையினர், ஐடி ஊழியர்கள், திரைத்துறையினர், சட்ட பணிகளுக்கு வருபவர்களுக்கு இந்த சலுகைகள் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.