சென்னை
தமிழகத்துக்கு வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது பயணத்தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் இ பாஸ் மூலம் மாநிலத்துக்குள் மற்றும் வெளி மாநிலங்களுக்குப் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
தற்போதுள்ள நிலவரப்படி இ பாஸ் முறை கட்டாயம் இல்லாத நிலை உள்ளது. ஆனால் தற்போது மீண்டும் நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு இன்று தமிழகத்துக்கு வெளிநாடுகள் மற்றும் வெளி நாட்டில் இருந்து வருவோருக்கு இ பாஸ் அவசியம் என அறிவ்டித்துள்ளது. இதில் புதுச்சேரி,கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது., மற்ற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.