சென்னை: தமிழகத்தில், பொது போக்குவரத்துக்கு அனுமதி மற்றும் இ-பாஸ் நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத்தலங்களுக்குச்  செல்ல இ-பாஸ் கட்டாயம் மாவட்ட  ஆட்சியர்கள் அறிவித்து உள்ளனர்.

கொரோனா முடக்கத்தில் இருந்து பல்வேறு தளர்வுகளை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. அதன் படி, செப்டம்பர் 1 (இன்று) முதல் இ-பாஸ் தேவையில்லை, மாவட்டங்களுக்குள் போக்குவரத்து என்று பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. மேலும், பொழுதுபோக்கு பூங்காங்கள் திறக்கவும், மால்கள் திறக்கவும் அனுமதி வழங்கி உள்ளது.

இதனால், மக்கள், 5 மாதங்களுக்கு பிறகு, மீண்டும் தங்கள் பொழுது போக்கை தொடங்கியுள்ளனர்.

 இந்த நிலையில், சுற்றுத்தலங்களான ஏற்பாடு, ஊட்டி, கொடைக்கானல் போன்ற  இடங்களுக்கு வர வேண்டாம் என்றும், வர நினைப்பவர்கள் இ.பாஸ் பெற்றால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மாவட்டஆட்சியர்கள் அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் எதுவும் தற்போது திறக்கப்படாது.  பிற மாவட்ட மக்கள் தேவையின்றி நீலகிரிக்கு வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், உள்ளூர் மக்கள் இ-பாஸ் பெற ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையை காட்டினால் போதும். அவர்களுக்கு மிக எளிதாக இ-பாஸ் வழங்கப்படும். மாவட்டத்துக்குள் 50 சதவிகித அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

அதுபோல  அரசு வழிகாட்டுதலின்படி, ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் பெறுவது அவசிய மானது என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

ஏற்காடு ஏரி

அதுபோல கொடைக்கானல் செல்லவும் இ-பாஸ் தேவை என மதுரை மாவட்டஆட்சியர் அறிவித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் இ-பாஸ் ரத்து செய்யப்பட்டதால், பொதுமக்கள்  ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு சென்ற முனைந்து வருவதால், அவர்களை தடுக்கும் பொருட்டு, இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மீறி செல்வர்களை மாவட்ட நிர்வாகம்  திருப்பி அனுப்பி வருகிறது.

கொடைக்கானல்  ஏரி