டெல்லி

      பரபரப்பான வாழ்க்கையில் இருந்து ஓய்வு கிடைத்த போதும் ஊரடங்கு சட்டத்தால் 21 நாட்கள் வீட்டிற்குள் முடிங்கியிருப்பதை  நினைக்கும்போதே சலிப்பு தோன்றலாம். அதற்கு புத்தகங்கள் மிகச் சிறந்த துணையாகும்.

      வீட்டிலிருப்போரை ஊக்கப்படுத்தவும்,  புத்துணர்ச்சியுடன் திகழவும்  மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இணையம் வழியே இலவச மின்நூல்களை படிக்க வழங்குகிறது. தேசிய புத்தக டிரஸ்ட் அமைப்பு, https://nbtindia.gov.in  எனும் இணைய தளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும்  அதிகம் விற்பனையாகும்  புத்தகங்களை பதிவேற்றியுள்ளது.

      வீரதீரக் கதைகள், அறிவியல் மற்றும் சிறுவர் நூல்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதனை வேறு எந்த  நோக்கத்துடனும் பயன்படுத்தக் கூடாது எனவும் அரசு தெரிவித்துள்ளது. நண்பர்களை, உறவுகளைப் பிரிந்து விடுதிகளில் தனித்திருப்போருக்கும் இது மிகச் சிறந்த பரிசுதான்.