சென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறை இணை தலைமை பொறியாளர் கார்த்திகேயினி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 6 டைரிகள், நகை ரசிதுகள், வங்கி கணக்குகள் உள்பட பல ஆவணங்களை கைப்பற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நெடுஞ்சாலைதுறை சம்பந்தமாக ஏராளமான ஊழல் புகார்கள் எழுந்துள்ள நிலையில், பல புகார்கள் நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நெடுஞ்சாலைத்துறை இணை தலைமை பொறியாளராக கார்த்திகேயினி வீட்டில் ரெய்டு நடத்தி பல டைரிகள், மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்தம் விடுவதில் பல கோடி ரூபாய் ஒப்பந்தம் எடுக்கும் தனியார் நிறுவனங்களில் இருந்து பெற்றதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர் புகார்கள் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக வறப்படுகிறது.‘
இதன் ஒருபகுதியாகத்தான், வெட்டுவாங்கேணியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி, அங்கிருந்து லஞ்சம் பணம் பரிவர்த்தனை குறிப்புகள் அடங்கிய 6 டைரிகள், தங்க நகைகள் வாங்கிய ரசீதுகள், குத்தகை ஒப்பந்தம் ரசீதுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்ததாகவும், மேலும, . நான்கு சக்கர வாகனத்தின் ஆர்சி.புத்தகங்கள் மற்றும் சொத்துப் பட்டியல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
லஞ்சஒழிப்புத்துறையினரின் இந்த திடீர் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வர இருக்கும் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், முந்தைய அமைச்சர்கள், அதிகாரிகள் செய்த ஊழல்கள் வெளியாகிவிடும் என்ற அச்சத்திலேயே, ரெய்டு நடத்தி, இணை தலைமை பொறியாளரிடம் இருந்த ரகசிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாககூறப்படுகிறது.