டில்லி,
டில்லி பல்கலைக்கழக தேர்தல் முக்கிய இரண்டு பதவிகளை பிடித்த காங்கிரஸ் காங்கிரஸ் சார்பு அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ) அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பரபரப்பான டில்லி பல்கலைக்கழக தேர்தலில் என்எஸ்யுஐ -க்கும், ஏபிவிபிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இதில், தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை காங்கிரஸ் சார்பு அமைப்பை கைப்பற்றியது.மாணவர் சங்க தலைவராக ராக்கி துஷீத், துணைத் தலைவராக குனால் ஷெராவத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) இணைச் செயலாளர், பொதுச் செயலாளர் ஆகிய இரு பதவிகளை பிடித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த மாணவர்களை தோற்டிகத்து காங்கிரஸ் மாணவர்கள் வெற்றி பெற்றது மாணவர்களிடையே குதூகலத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகக்களில் ஒன்றான டில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தன. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், தொடக்கத்தில் முன்னிலை வகித்து வந்த ஏ.பி.வி.பி ( ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பு) நேரம் செல்ல செல்ல பின்னடைவை நோக்கி செல்ல தொடங்கி யது.
காங்கிரஸ் சார்பு அமைப்பான என்எஸ்யுஐ முன்னிலை பெற்று வந்தது. இறுத்யில், காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்.எஸ்.யு.ஐ) தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
பரபரப்பான நடைபெற்ற இந்த மாணவர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் மாணவர் அமைப்பினருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அதைத் தொடர்ந்து வெற்றிபெற்ற மாணவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற ஜேஎன்யூ மாணவர் சங்க தேர்தலில் ஒட்டு மொத்த இடங்களை யும் இடதுசாரி மாணவர்கள் கூட்டமைப்பு வென்றது. கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜாவின் மகள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.