ரியாத்

கொரோனாவை முன்னிட்டு மெக்கா மற்றும் மதினா மசூதிகளை சவுதி அரேபிய அரசு ரம்ஜான் மாதத்தில் மூடி உள்ளது.

சவுதி அரேபியாவில் அமைந்துள்ள மெக்கா மற்றும் மதினா ஆகிய இரு இடங்களும் இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களாகும்.   இந்த இரு இடங்களிலும் ரம்ஜான் மாதத்தில் சிறப்புத் தொழுகைகள் நடப்பது வழக்கம்.  இதற்காக உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் லட்சக்கணக்கில் சவுதி அரேபியாவுக்கு வருவது வழக்கமான ஒன்றாகும்.

இந்த மசூதிகளில் அதையொட்டி ரம்ஜான் மாதம் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு தினமும் மாலை இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் விழா நடைபெறும்.

சவுதி அரேபியாவில் இதுவரை 10000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கபடுள்ளன்ர்.  மேலும் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் சவுதி அரேபியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு மெக்காவுக்கு உம்ரா பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது.   அத்துடன் ஹஜ் பயணத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரம்ஜான் மாதம் அதிக அளவில் மெக்கா, மதினா மசூதிகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளதால் இந்த மசூதிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.  அது மட்டுமின்றி இந்த மசூதிகளில் ரம்ஜான் மாதம் தினசரி  நடைபெறும் இஃப்தார் என்னும் நோன்பு திறப்பும் ரத்து செய்யபட்டுளது.   இந்த நோன்பு திறப்புக்கான உணவுகள் நகர அலுவலர்கள் மூலம் தனித்தனியாக வழங்கப்பட உள்ளது