லேசியா

ம்ஜான் மாதத்தை முன்னிட்டு மலேசியாவில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகங்கள், துரித உணவு மையங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் கொரோன பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.  எனவே உணவு விடுதிகள் மற்றும் துரித உணவு மையங்களில் வீட்டுக்கு எடுத்துச் செல்ல மட்டும் அனுமதி உள்ளது.    அனைத்து உணவகங்களும் மாலை 7 மணிக்கு மூடப்படுகின்றன.

தற்போது ரம்ஜான் மாதம் என்பதால் இஸ்லாமிய மக்கள் மதியம் உணவு அருந்துவது இல்லை

எனவே உணவகங்கள் இயங்கும் நேரத்தை மலேசிய அரசு மாற்றி அமைத்துள்ளது.  அரசின் பேரழிவு மேலாண்மைக் குழு கவுரவ உறுப்பினர் அப்துல் கரீம் ரகுமான், “ர,ம்ஜான் மாதத்தை முன்னிட்டு மலேசியாவில் அனைத்து ஓட்டல்கள், உணவகங்கள், மற்றும் துரித உணவு மையங்கள் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும்.

அதே வேளையில் ரம்ஜான் மாதத்தில் சந்தைகள் மற்றும் தெருக்களில் உள்ள உணவகங்கள் இயங்க அனுமதி இல்லை.    அனைத்து உணவகங்களிலும் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. உணவு வாங்குவோர் வீட்டுக்கு எடுத்துச் செல்ல மட்டுமே அனுமதி உள்ளது.

மக்கள் இரவு 10 மணி வரை உணவு வாங்க  மட்டும் வெளியில் செல்ல அனுமதி உள்ளது.  அதைப் பயன்படுத்தி யாரும் வேறு காரணங்களுக்காக வெளியில் செல்லக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இவர் சுற்றுலா, கலை, கலாச்சாரம், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறைகளின் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.