ண்ட்வால்

ர்நாடகாவில் ஒரு சூதாட்ட விடுதியில்  காவல்துறை சோதனை இட்ட போது சூதாட்டக்காரரக்ள் பணத்தை ஜன்னல் வழியாக வீசி உள்ளனர்.

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பி.சி.ரோடு அருகே பிமூடா பகுதியில் கேளிக்கை விடுதி ஒன்று செயல்படுகிறது.  இங்கு பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக பண்ட்வால் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.   காவல்துறையினர் கேளிக்கை விடுதிக்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் கேளிக்கை விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பது உறுதியானது.  சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 28 பேரை மடக்கிப் பிடித்து காவல்துறை கைது செய்தனர்.

காவல்துறையைக் கண்டதும் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கள் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளைக் கேளிக்கை விடுதியின் ஜன்னல் வழியாக வீசியுள்ளனர்  ஜன்னல் வழியாக வீசினர் அப்பகுதி சாலையில் பணம் மழை பொழிந்துள்ளதால் பொதுமக்கள் முண்டியடித்து..கொண்டு எடுத்தனர். இதனால் பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காவல்துறையினர் பொதுமக்களை விரட்டியடித்து பணத்தைப் பறிமுதல் செய்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரூ.1 லட்சத்துக்கு மேல் ஜன்னல் வழியாக வீசியுள்ளனர். ஆயினும் காவல்துறையால் ரூ.26 ஆயிரம் மட்டுமே மீட்கப்பட்டது.  மீதமுள்ள பணத்தைப் பொதுமக்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. பண்ட்வால் காவல்துறை இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.street