சபரிமலை

மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நேரத்தில் சபரிமலையில் தின்சரி 20,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என முதல்வர் பின்ராயி விஜயன் அறிவித்துள்ளார்,

அடுத்த மாதம் 16 ஆம், தேதி சபரிமலையில் மண்டல பூஜை விழா தொடங்க உள்ளது.  அதைத் தொடர்ந்து மகரஜோதி விழா நடைபெற உள்ளது.  இந்த கால கட்டத்தில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வருவது வழக்கமாகும்.   தற்போது கொரோனா விதிமுறைகள் காரணமாக நாடெங்கும் கட்டுபாடு உள்ளது.

எனவே இது குறித்து கேரளாவில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அதையொட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன்,  ”மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு கால கட்டத்தில் தினசரி 25000 பக்தர்களுக்கு அனுமதி வழங்க உள்ளோம் தேவைப்பட்டால் இதை அதிகரிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.  அதே வேளையில் ஏற்கனவே உள்ள  கொரோனா  தடுப்பு வழிகாட்டு நெறி முறைகள் தொடரும்.

சபரிமலை வரும் பக்தர்கள் கட்டாயம் 2 டொஸ் தடுப்பூசிகள் போட்டிருக்க வேண்டும்.  அவ்வாறு போடாதவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.   சென்ற வருடத்தைப் போல் இந்த வருடமும் எரிமேலி வழியாக வர பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.  பக்தர்கள் நிலக்கல்லில்  ருந்து அரசு பேருந்துகள் மூலம் மட்டும் பம்பைக்குச் செல்ல வேண்டும்.  பக்தர்கள் பம்பையில் நீராட அனுமதி அளிக்கப்படுகிறது.”  என அறிவித்துள்ளார்.