டில்லி

ணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 2016 ஆம் வருடம் வழக்கமாக கணக்கு அளிப்பவர்களில்  88.04 லட்சம் பேர் வருமான வரிக்கணக்கு அளிக்கவில்லை.

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.   இதனால் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் ஒரே இரவில் செல்லாத நோட்டுக்கள் ஆகின.    இது மோடியின் சாதனை என பாஜகவினர் புகழும் வேளையில் பல பொதுமக்கள் தங்களிடம் உள்ள நோட்டுக்களை மாற்ற பெரிதும் துயருற்ற செய்திகள் வெளியாகின.

பணமதிப்பிழப்பு வருடமான 2015-16 ஆம் வருடம் புதியதாக வருமான வரிக் கணக்கு அளித்தவர்களின் எண்ணிக்கை 106.95 லட்சம் ஆகி உள்ளதாக வருமான வரித்துறை அறிவித்தது.   அத்துடன் இது பணம்திப்பிழப்பு நடவடிக்கையின் வெற்றி என அரசின் தரப்பில் சொல்லப்பட்டது.    அதே நேரத்தில் தொடர்ந்து வரி செலுத்தி வந்தவர்களில் எத்தனை பேர் அந்த வருடம் கணக்களிக்கவில்லை என்னும் விவரம் ஆராயப்படவில்லை.

அவ்வாறு ஆராயும் போது அந்த வருடம் மட்டும் வழக்கமாக கணக்கு அளிப்பவர்களில் 88.04 லட்சம் பேர் கணக்கு அளிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.   இது அதற்கு முந்தைய வருடமான 2015-16 ஐ விட 10 மடங்கு அதிகமாகும்.   இதில் மரணமடைந்தோர் மற்றும் பான் கார்டுகளை திரும்ப அளித்தோர் எண்ணிக்கையை சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.

இது கடந்த 20 ஆண்டுகளில் மிகவும் அதிகமான எண்ணிக்கை ஆகும்.   கடந்த 2013 ஆம் வருடம் 37.54 லட்சம் பேரும் 2014 ஆம் வருடம் 27.02 லட்சம் பேரும் கணக்கு அளிக்காமல் இருந்துள்ளன்ர்.  ஆனால் 88.04 லட்சம் பேர் கணக்கு அளிக்காமல் இருந்தது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

இவ்வாறு கணக்கு அளிக்காமல் இருந்ததற்கு முக்கிய காரணமாக பலரும் வேலை இழந்ததால் வருமானம் மிகவும் குறைந்தது என கூறப்படுகிறது.    அது மட்டுமின்றி அந்த வருடத்தில் டிடிஎஸ் பிடித்தமும் மிகவும் குறைவாகவே இருந்துள்ளது.   அப்படி டிடிஎஸ் பிடிக்கப்பட்டவர்களில் பலரும் மேற்கொண்டு வரி செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.