சென்னை: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம்  வழங்கும் வகையில்,  ‘அமுதக் கரங்கள்’ என்ற திட்டத்தை  முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் ‘அமுதக் கரங்கள்’ திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி வரை 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கும் ‘அமுதக் கரங்கள்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

தமிழ்நாடு முதலமைச்சரும், முதல்வருமான  மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1ந்தேதி ஆகும். இதை பிரமாண்டமாக கொண்டாட கட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர். அதற்கான பல்வேறு நலத்திட்டங்களை வழங்கவும்,  தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒரு வருடம், நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு உணவழிக்கும் வகையில் அமுத கரங்கள் என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அதனப்டி,  இந்த திட்டத்தை முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் இனறு கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்படி,  நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கும் வகையில் இந்த  திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]