
நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தான் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். தனது புதிய படமான ‘துர்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
இதன் மூலம் அவர் மற்றொரு திகில் படத்திற்கு தயாராகி வருவதாகத் தெரிகிறது.
அதில் ராகவா லாரன்ஸ் நீண்ட தாடி மற்றும் மீசையுடன் ஒரு பழைய தோற்றத்தில் காணப்படுகிறார். இதனை ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. படம் தொடர்பான மற்ற தகவல்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘முனி’ (2007), ‘முனி 2: காஞ்சனா’, ‘காஞ்சனா 2’ மற்றும் ‘காஞ்சனா 3’ ஆகியவை பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட்டானவை என்பது குறிப்பிடத்தக்கது .
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவனம் பெற்றதைத் தொடர்ந்து, படத்தின் செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டிருந்த செகண்ட் லுக் போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள், ‘செல்ஃபி எடுத்து பதிவேற்றிவிட்டு செகண்ட் லுக் போஸ்டர் என்கிறீர்கள்’ என கலாய்க்க ஆரம்பித்தனர்.
[youtube-feed feed=1]#Durga second look! #RagavendraProductions pic.twitter.com/XjNhGhmylU
— Raghava Lawrence (@offl_Lawrence) August 6, 2021