மம்முட்டியைத் தொடர்ந்து அவரது மகன் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் துல்கர் சல்மான், “லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் தனக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

வீட்டு தனிமையில் இருக்கிறேன். கடந்த சில நாட்களில் என்னுடன் படப்பிடிப்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதித்து கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கடந்த வாரம் இவரது தந்தையும் நடிகருமான மம்முட்டிக்கு கொரோனா உறுதியானது.