துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தை ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார். இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் உருவாக்கவுள்ளார்கள்.
இந்த படத்திற்கு P. S. வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தில் லெப்டினன்ட் ராம் எனும் ரானுவ வீரர் வேடத்தில் நடிக்கவுள்ளார் துல்கர்,
“ராணுவ வீரன் ராம்- போரூற்றி எழுதிய காதல் கதை” என்ற வரிகளுடன் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
துல்கர் சல்மானின் பிறந்த நாள் ஸ்பெஷலாக இப்படத்தின் போஸ்டர் ஒரு அழகான டெலிகிராமைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள நிழற்படத்தில் துல்கர் ஒரு ராணுவ வீரனாகத் தோன்றுகிறார், அதில் இரண்டு கைகளும் ஒன்றாக இணைவது ஒரு காதல் பக்கத்தைக் குறிக்கிறது. போர்ப் பின்னணியில் ஒரு காதல் கதையாக உருவாகவுள்ளது.
இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார். வைஜெயந்தி மூவீஸ் வழங்கும் இப்படத்தை ஸ்வப்னா சினிமாஸ் சார்பாக பிரியங்கா தத், ஸ்வப்னா தயாரிக்கிறார்கள்.