தாக்குதல் எதிரொலி : ஜம்மு தேர்வுகள் தள்ளிவைப்பு – மொபைல் இண்டர்நெட் நிறுத்தம்

Must read

ம்மு

ன்று நடைபெறுவதாக இருந்த ஜம்மு பல்கலைக்கழகத்தின் அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

புல்வாமாவில் நேற்று நடந்த பயங்கர வாத தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட எல்லைப் பாதுகாப்பு ரிசர்வ் காவல் படையினர் உயிரிழந்துள்ளனர்.   இந்த நிகழ்வுகு ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.    இந்த தாக்குதலை தொடர்ந்து மாநிலத்தில் கடும் பதட்டம் நிலவுகிறது.

இதை ஒட்டி தெற்கு காஷ்மீர் பகுதியில் மொபைல் இண்டர்நெட் தடை செய்யப்பட்டுள்ளது.    தேவையற்ற மற்றும் தவறான செய்தி பரிமாற்றத்தலால் வன்முறை ஏற்படும் என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீடியோக்கள் பரப்பப் படுவதை தடுக்க காஷ்மீர் மாநிலத்தின் மற்ற நகரங்களிலும் இணைய வேகம் 2 ஜி ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இன்று ஜம்முவில் இந்த தாக்குதலை எதிர்த்து முழு அடைப்புக்கு பல அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.    அதனால் இன்று நடைபெறுவதாக இருந்த ஜம்மு பல்கலைக்கழகத்தின் எழுத்து மற்றும் செய்முறை உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

More articles

Latest article