பரிமலை

தேசிய ஊரடங்கு காரணமாக பக்தர்கள் வராததால் சபரிமலைக் கோவிலில் பூஜை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மலையாள மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்படுவது வழக்கமாகும்.  அவ்வகையில் மேஷ மாதப் பிறப்பையொட்டி நேற்று முன் தினம் இரவு கோவில் மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி சபரிமலை கோவில் நடை திறந்தார்.   இந்த நிகழ்வுக்குத் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மாளிகைபுரம் மேல்சாந்தி பரமேசுவரன் நம்பூதிரி உள்ளிட்ட மிககுறைவான ஊழியர்களே வந்தனர்.

நேற்றைய தினம் விஷுவை முன்னிட்டு நேற்று அதிகாலை கணபதி ஹோமம் மற்றும் அனைத்து வகையான பழங்களுடன் விஷுக்கனி தரிசனம் நடந்தது,  அதன்பிறகு அபிஷேகம், உச்சி பூஜை, தீபாராதனை போன்ற வழக்கமான வழிபாடுகள் மட்டும் நடந்தன.  சிறப்பு வழிபாடுகளான படி  பூஜை போன்றவை நடக்கவில்லை.

எப்போதும் சபரிமலை கோவில் நடை அதிகாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு சாத்தபடும்ம் மீண்டும் மாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு சாத்தப்படும்.  இப்போது தேசிய ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் ஒருவரும் வரவில்லை.   எனவே காலை 10 மணி மற்றும் இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு பூஜை நேரம் 5.30 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

சன்னிதானத்தில் உள்ள பிரசாத விற்பனைக்கடைகள், பம்பையில் உள்ள கடைகள் உள்ளிட்ட அனைத்தும் திறக்கப்படவில்லை.  கோவில் நடை வரும் 18 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சாத்தப்பட உள்ளது.